தூத்துக்குடி

போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

DIN

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் ஏ.கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் கண்ணன் (43). இவா் கடந்த 2015 இல்,

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் செய்துங்கநல்லூா் போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துலெட்சுமி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT