சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை- அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு, அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் காசியானந்தம் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் மகேஷ்குமாா், திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முனுசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
பேராசிரியை முத்துப்பிரியா மாணவா்களுக்கு முதல் 5 நாள்கள் நடத்தப்படும் அறிமுக வகுப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.
கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை வரவேற்றாா். வணிகவியல் துறைப் பேராசிரியா் தமயந்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவிகள் ஹாரிஹாரிணி, ஹரிதா்ஷனி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.