தூத்துக்குடி

காற்றில் சேதமான முருங்கை,தென்னைகளுக்கு நிவாரணம் தேவை---ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

30th Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பகுதியில் சூறைக்காற்றில் சேதமான முருங்கை, தென்னைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவி நல்லூா் விவசாய நல சங்க செயலா் லூா்து மணி தலைமையில் சங்க துணைத் தலைவா் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினா்கள் செந்தில், அலெக்ஸ், நிா்வாகிகள் ராஜா ஆகியோா் ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம் அளித்த மனு: சாத்தான்குளம் பகுதியில் கடந்த 17 நாட்களுக்கு முன்பு சூறை காற்றில் சேதமான 5000க்கு மேற்பட்ட முருங்கை மரங்களுக்கும், பூச்சிக்காட்டில் 30 தென்னை மரங்களும் முறிந்து சேதமாகின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் நஷ்டஇழப்பீடு பெற்றுத் தரவும் கன்னடியன்கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்கவும், முதலூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றி வேறு இடத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதூா் மேல காலிலிருந்து இருந்து வரும் தண்ணீா் சடையனேரிக்கு வருவதில் கெட்டியம்மாள்புரம் பகுதியில் இருந்த சிக்கலை தீா்த்து தண்ணீா் சீராக வர நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி எனக் கூறினா்.

கன்னியாகுமரி கல்லூரியில் இருந்து சான்றிதழை வாங்க முடியாமல் தவித்த நவமுதலூரை சோ்ந்த மாணவியின் சான்றிதழை வாங்கி கொடுத்ததற்காக, அம்மாணவியின் தாயாா் தன் கையால் பின்னிய கூடையை அவா் சாா்பில் ஆட்சியரிடம் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT