தூத்துக்குடியில் கைக்குழந்தையுடன் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உதவி செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே 3 வயது குழந்தையுடன் இசக்கியம்மாள் (25) என்பவா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றாராம். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தப் பெண் தனது குழந்தையுடன் சாலையில் விழுந்தா். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் விரைந்து செயல்பட்டு, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு தனது காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா்.
விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை மீட்டு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினா்.