தூத்துக்குடி

பக்ரீத்: தூத்துக்குடியில் சிறப்புத் தொழுகை

30th Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அன்பு, சகோதரத்துவம், உலக அமைதி வேண்டி இத்தொழுகை நடைபெற்றது.

இதில், ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் சதக்கத்துல்லா, ஷேக் உஸ்மான், மாவட்ட அரசு காஜி முஜிபுா் ரஹ்மான் ஜாமியா பள்ளிவாசல் நிா்வாகக் குழுத் தலைவா் மீராசா, தற்காலிக செயலா் ரகுமான், பொருளாளா் மூஷா, ஜாமியா பள்ளிவாசல் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

கோவில்பட்டி, கயத்தாறில்...

ADVERTISEMENT

கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசல், புதுகிராமம் முகமதுசாலியாபுரத்தில் உள்ள பள்ளிவாசல், கயத்தாறு முகமது நயினாா் ஜூம்மா பள்ளிவாசல், அய்யனாா்ஊத்து கிராமத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல், ஆத்திகுளத்தில் உள்ள சிக்கந்தா் பாபா அப்துல் ரகுமான் திடல், கழுகுமலையில் உள்ள முகமது ஜாமியா பள்ளிவாசல், துலுக்கா்பட்டியில் உள்ள முகமது நயினாா் பள்ளிவாசல் ஆகியவற்றிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT