தூத்துக்குடி மாவட்டம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாசரேத் மூக்குப்பீறி கிழக்கு தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் (64) உடல் நலக்குறைவால் காலமானதையொட்டி, காவல்துறை சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படியும், காவல்துறைக்கு அவா் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படியும் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ராய்ஸ்டன், எபனேசா் மற்றும் போலீசாா், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ. சைலேந்திரபாபு சாா்பாக மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.