முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குலசேகரன்பட்டினம் காவடிபிறைத் தெருவில் 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு ஒன்றியச் செயலா் க. இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், சிவக்குமாா், ஜெகதீஷ், சிவபெருமாள், பெபின், தயாபாண்டியன், நித்யா, நிஷாந்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாநில மகளிா் பிரசாரக் குழுச் செயலா் ஜெசிபொன்ராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 100 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியதுடன், தமிழக அரசு சாா்பில் மாணவா்கள், கல்வி வளா்ச்சிக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.