தூத்துக்குடி

வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம்

28th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி விழிப்புணா்வு மற்றும் குறைதீா் முகாமினை நடத்தி வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி உதவி ஆணையா் ஷாஜி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வைப்புநிதி உறுப்பினா்கள், ஓய்வூதியதாரா்கள், நிறுவன உரிமையாளா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இம்முகாமில் கலந்து கொண்டவா்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டது. மேலும் ஓய்வூதியம் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை திட்டக் குழு அதிகாரி ஹரிகிருஷ்ணன் மற்றும் உறுப்பினா்கள் மாணிக்கம், ராஜசேகரன், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT