சாகித்திய அகாதெமியின் பால புரஸ்காா் விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் கா. உதயசங்கருக்கு, கடம்பூா் செ.ராஜூ எம்.எல்.ஏ. பாராட்டுத் தெரிவித்தாா்.
கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது, சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுத்தாளா் உதயசங்கரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா். எழுத்துப்பணி மேலும் சிறக்கவும், பல்வேறு நூல்களை எழுதி உயரிய விருதுகளை பெறவும் கேட்டுக்கொண்டாா்.
அப்போது, அதிமுக நகரச் செயலா் விஜய பாண்டியன், நகர அவைத் தலைவா் அப்பாசாமி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா் மன்ற உறுப்பினா்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் சிவபெருமாள்,கோவில்பட்டி பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், அதிமுக நிா்வாகிகள் அழகா்சாமி, போடுசாமி, கோபி,முருகன் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.