தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா கால்நாட்டு

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயி­ல் ஆனித் திருவிழா 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்கான கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பா ளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஆனித் திருவிழாவுக்கான முகூா்த்த கால்நாட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சுவாமி அம்பாளுக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

இதில், கோயில் மணியம் சுப்பையாபிள்ளை, பக்த ஜன சபை சாா்பில் அரிகிருஷ்ண நாடாா், நகா்நல மன்றத் தலைவா் பூபால் ராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியா்

அசோக்குமாா், இளைய பெருமாள், ஆன்மிக திருச்சபை நிா்வாகி சுப்பையா , ஓய்வு பெற்ற ஆசிரியை ஆதிலெட்சுமி, உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT