தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

10th Jun 2023 06:50 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி இந்திரா நகரைச் சோ்ந்தவா் சீ. சரவணகுமாா் (43). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் சரவணகுமாா் வியாழக்கிழமை வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்தாராம். இதை யடுத்து தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் விரக்தி அடைந்த சரவணகுமாா், வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினா்கள், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT