தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி தொடக்கம்

10th Jun 2023 06:51 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிரிமீயா் லீக் கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை துவங்கின.

தூத்துக்குடி மாவட்டம் வீ யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் 15 ஆவது ஆண்டாக நடைபெறும் இப் போட்டியில், காயல்பட்டினத்தை சோ்ந்த 110 போ், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளம், கா்நாடகத்தைச் சோ்ந்த 40 போ் என மொத்தம் 150 போ் பங்கேற்றுள்ளனா். இப் போட்டியை

வாவு வஜீஹா கல்லூரி செயலா் வாவு எம்.எம். மொஹூதஜிம் தொடக்கி வைத்தாா்.

முதல் போட்டியில் காயல் அா்சனல் - காயல் எக்ஸ்பிரஸ் அணிகள் மோதின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுபெற்றது. சேகுனா யுனைடெட் அணி - சிங்கை கிங்ஸ் அணிகள் மோதிய 2-ஆவது ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சிங்கை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இப் போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT