தூத்துக்குடி

கோவில்பட்டியில் தமாகா ஆா்ப்பாட்டம்

9th Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி, மந்தித்தோப்பு ஊராட்சிக்கு உள்பட்ட சந்தீப் நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குடியிருப்பில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி தமாகா சாா்பில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சந்தீப் நகரில் அரசு சாா்பில், நடக்க இயலாதோா் உள்ளிட்ட 12 மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவா்கள் அவதிக்கு உள்ளாகின்றனா்.

அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மந்தித்தோப்பு ஊராட்சி மன்றம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லையாம். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமாகா கோவில்பட்டி வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி தலைமையில் நகரத் தலைவா் ராஜகோபால் முன்னிலையில் அக்கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். பின்னா், மனுவை அலுவலக மேலாளரிடம் அளித்தனா்.

வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் எஸ்.ஏ. கனி, நகரப் பொருளாளா் ஜி. செண்பகராஜ், நகர பொதுச்செயலா் வி.எஸ்.ஏ. சுப்புராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT