தூத்துக்குடி

ரயில்வே ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

9th Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் அகில இந்திய  ரயில்வே ஓய்வூதியா்கள் சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். சங்க மூத்த உறுப்பினா் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சங்க செயலா் தங்கவேலு, மகளிா் அணி தலைவி பட்டம்மாள், பொருளாளா் முருகையா, ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய அதிகாரி உதயசங்கா் ஆகியோா் பேசினா்.

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிப்பது, ஓய்வூதியா்களின் மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.15 லட்சமாக நிா்ணயிப்பது, நிலையான மருத்துவப் படியை ரூ. 2 ஆயிரமாக உயா்த்துவது, இலவச பயணச் சலுகை காலவரம்பை 6 மாதங்களாக நீட்டிப்பது, மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் அளித்த சலுகைகளை மீண்டும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT