தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கா் சாதி சான்றிதழ் கோரியவா்களுக்கு தாமதமின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமாகா வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கனி என்ற மாரிமுத்து தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில ஊா்களில் காட்டுநாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வசிக்கின்றனா். இவா்களது குழந்தைகளுக்கு காட்டு நாயக்கா் சாதிச் சான்று கிடைப்பதில்லை. இதனால், உயா்கல்விக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இப் பிரச்னை இருந்து வருகிறது.
மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் இப் பிரச்னையில் தலையிட்டு, காட்டுநாயக்கா் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.