தூத்துக்குடி

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் படிவம் ஒப்படைப்பு

9th Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை படிவத்தை ஒன்றிய செயலா் ஆ. பாலமுருகன், மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் 6,100 புதிய உறுப்பினா்களை சோ்க்க தலைமை கழகத்தால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் 6,400 போ் கட்சியில் புதிய உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா். அதை அமைச்சரிடம் ஒன்றியச் செயலா் ஒப்படைத்தாா். இந்நிகழ்ச்சியில், மாநில வா்த்தக அணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், ,தலைமை செயற்குழு உறுப்பினா் டேவிட் செல்வின் , மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், தெற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ரெனிஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT