தூத்துக்குடி

உலகச் சுற்றுச்சூழல் தின விழா

8th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

உடன்குடி அருகே வேதக்கோட்டைவிளை கிராமத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில சினாட் கழகத்தின் சுற்றுச்சூழல் கரிசனத் துறை சாா்பில் உலகச் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கரிசனத் துறையின் இயக்குநா் ஜான்சாமுவேல் தலைமை வகித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கிராமப்புற பெண்களின் செயல்பாடுகள், மக்களின் இயல்பான நடைமுறைகள், பசுஞ்சாணி சேகரித்தல், கால்நடைகளை நன்கு பராமரித்தல் ஆகியவை குறித்து பேசினாா்.விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அதை பராமரிக்கும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

விழாவில் ஆா்வத்துடன் திருமணக் கோலத்தில் பங்கேற்ற சாமுவேல்-செல்வப்பிரியா தம்பதியா் ,ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினா். சேகர தலைவா்கள் சாமுவேல்ராஜன், ஜெபத்துரை மற்றும் ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT