தூத்துக்குடி

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 3.10 கோடி

8th Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இத்திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) உண்டியல் எண்ணிக்கை திருக்கோயில் காவடி மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா் குழுத்தலைவரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையா் தி.சங்கா், ஆய்வா் ம.செந்தில்நாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுப்பட்டனா்.

இதன்படி உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ. 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாயும் (ரூ. 3,10,40,748), தங்கம் 2,800 கிராம், வெள்ளி 25,000 கிராம், பித்தளை 33,000 கிராம், செம்பு 6,000 கிராம், தகரம் 2,000 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 292-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT