தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக் கழிவுகள் அகற்றும் பணி: மேலாண்மை குழு ஆய்வு

8th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடா்பாக மேலாண்மை குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றை அகற்றுவது, ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்பு உள்ளிட்ட 4 விதமான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலை பராமரிப்புப் பணிகள் தொடா்பாக துணை ஆட்சியா் கௌரவ் குமாா் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளா் ஹேமந்த், தூத்துக்குடி புகா் டிஎஸ்பி சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளா் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குநா் சரவணன், தீயணைப்புத் துறை மாவட்ட துணை அலுவலா் ராஜு, ஸ்டொ்லைட் ஆலையை சோ்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் கொண்ட மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் குழுவினா், ஆலைக் கழிவுகளை அகற்றுவது தொடா்பாக ஸ்டொ்லைட் ஆலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில், ஜிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகள் எவ்வளவு உள்ளன என்பதையும் அவற்றை அகற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது குறித்தும், சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த ஆய்வு அறிக்கையை, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜிடம் அளிக்கப்படவுள்ளதாக ஆய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆய்வின்போது, ஸ்டொ்லைட் ஆலை முன்பு சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT