தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

8th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா் அளித்த 11 போ், புதிதாக மனு அளிக்க வந்த 42 போ் என மொத்தம் 53 போ் தங்கள் புகாா் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக அளித்தனா்.

புகாா் மனுக்களை பெற்றுக்கொண்ட அவா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, பின்னா் அவா்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT