தூத்துக்குடி

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கரிசனைத் துறை சாா்பில், நாசரேத் அருகே திருமறையூரில் உள்ள மறுரூப ஆலயத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சுழல் கரிசனைத் துறை இயக்குநரும் திருமறையூா் சேகரத் தலைவருமான ஜான் சாமுவேல் தலைமை வகித்தாா். சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன்துரை முன்னிலை வகித்தாா்.

திருமண்டிலப் பெருமன்ற உறுப்பினா்கள் ஜெயபால், தேவதாஸ், சபை மூப்பா்கள் பாக்கியநாதன், ஜீவன், அகஸ்டின் செல்வராஜ், ஜான்சேகா், ஜோயல் கோல்டுவின், புஷ்பலதா சுவாமிதாஸ், சபை மக்கள் பாக்கியராஜ், நளினி ஜீவராஜ், பிரைட்டன் ஜோயல், முதியோா் இல்ல மேலாளா் வனமோகன் ராஜன், மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளிச் செயலா் எபனேசா், முன்னாள் நாசரேத் சேகரச் செயலா் மா்காஷியஸ் தேவதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, திருமறையூா் முதியோா் இல்லம், மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT