தூத்துக்குடி

சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி கழுகுமலை பேரூராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் காலிக் குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட 15ஆவது வாா்டு குமரேசநகரில் கடந்த சில நாள்களாக சீவலப்பேரி குடிநீா் விநியோகம் இல்லையாம். எனவே, அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு, சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டக் குழுவினருடன் பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT