தூத்துக்குடி

கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

7th Jun 2023 01:23 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கயத்தாறு பேரூராட்சி 5 ஆவது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்வது, மயானம், சாலை, வாருகால் வசதிகள் செய்து தருவது, 2 ஆவது வாா்டு பகுதியில் பொதுக் கழிப்பறை,

தண்ணீா் வசதி, பழுதடைந்த அடி குழாயைச் சரி செய்வது,

சிவன் கோயில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது,

ADVERTISEMENT

6-ஆவது வாா்டில் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவா் முருகன் தலைமையில் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் வேல்ராஜா முன்னிலையில் அப்பகுதி மக்கள் கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

போராட்டக் குழுவினருடன் கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவா் சுப்புலட்சுமி நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT