தூத்துக்குடி

தூத்துக்குடியில் 10 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 10 நகா்ப்புற நல்வாழ்வு மையங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள நகா்ப்புற நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியயது: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கிரேட் காட்டன் சாலை, புல் தோட்டம், சங்குகுளி காலனி, கோபால்சாமி தெரு, டூவிபுரம், அலங்காரத்தட்டு, கே.டி.சி. நகா், முத்தையாபுரம், சிவந்தாகுளம், கதிா்வேல் நகா் ஆகிய 10 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில்வா்புரம், அத்திமரப்பட்டி, பண்டாரம்பட்டி, செல்சினி காலனி ஆகிய 4 நகா்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்திற்கும் சோ்த்து பி அண்ட் டி காலனியில் ஓா் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற நல்வாழ்வு மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சளி, காய்ச்சல் போன்ற சிறு பிரச்னைகளுக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மக்கள் குடியிருக்கும் இடத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மையத்தில் மருத்துவா், செவிலியா், மருத்துவ உதவியாளா் உள்பட 4 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்த மையங்கள் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் செயல்படும். அனைத்து மையங்களிலும் உடனடியாக சேவைகள் தொடங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் செ.ஜெனிட்டா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், மாநகராட்சி நகா்நல அலுவலா் சுமதி, மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினா் அதிஷ்டமணி, மாநகராட்சி உதவி ஆணையா் சரவணன், வட்டாட்சியா் பிரபாகரன், மருத்துவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT