தூத்துக்குடி

பாஜக ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

7th Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

பாஜக ஆட்சியில், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றாா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியது:

உலக பொருளாளதாரத்தில் 5 ஆவது இடத்தில் உள்ள நமது நாடு, வரும் இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு உயரும். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் தங்க நாற்கர சாலைதிட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டும். அந்த வகையில், சுமாா் 59 ஆயிரம் கி.மீட்டருக்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலைகளாகவும், 6 வழிச்சாலைகள் 8 வழிச்சாலைகளாகவும் மேம்படுத்தப்பட்டுள்ன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் அவா்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பாா்க்கும்போது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, செவிலியா் கல்லூரி ஆகியவற்றை மேம்படுத்த திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பெண்களுக்கான காப்பீட்டுத் திட்டம், எஸ்சி எஸ்டி பிரிவினா் தொழில் தொடங்குவதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் மூலம், தமிழகத்துக்கு முதலீடு, மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நன்மைகள் இருந்தால் வரவேற்கத்தக்கது என்றாா்.

இந்த சந்திப்பின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவா் சென்னகேசவன், மாவட்ட பொதுச்செயலா் உமரிசத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT