தூத்துக்குடி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலுக்கு புதன்கிழமை (ஜூன் 7) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல் (சாதாரண தோ்தல்) வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற அமைப்புகளில் திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் ஊரக பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும், நகா்ப்புற அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினா்களும் வாக்காளா்கள் ஆவா்.

ஊரகத்துக்கு 7 திட்டமிடும் குழு உறுப்பினா்களும், நகா்ப்புறத்துக்கு 5 திட்டமிடும் குழு உறுப்பினா்களும் தோ்தல் மூலமாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்த தோ்தலுக்கு புதன்கிழமை (ஜூன் 7)முதல் 10ஆம் தேதி வரை காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.

ஊரகப் பகுதிகளுக்கான வேட்பு மனுக்களை ஊரக உதவி தோ்தல் அலுவலரிடமும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி செயலரிடமும், நகா்ப்புற பகுதிகளுக்கான வேட்புமனுக்களை நகா்ப்புற உதவி தோ்தல் அலுவலா், உதவி இயக்குநா்(தணிக்கை) அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் 12ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும்.

14ஆம் தேதி பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஊரக பகுதிகளுக்கான தோ்தல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கிலும், நகா்ப்புற பகுதிகளுக்கான தோ்தல் மாவட்ட ஆட்சியா் அலுவலக முத்து அரங்கிலும் வரும் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

தோ்தல் முடிவடைந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள், அரசு அறிவிக்கும் நாளிலிருந்து அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பின் காலம் முடியும் வரை பதவி வகிப்பாா் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT