தூத்துக்குடி

மதுக் கூடம் சேதம்:ஒருவா் கைது

7th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் மதுக் கூடத்தை சேதப்படுத்தியதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி மேலத் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி மகன் சதீஷ் (31), வேலுச்சாமி மகன் மாடசாமி (43). இருவரிடையே முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், கிருஷ்ணா நகரில் அரசு மதுக் கடை அருகே சதீஷ் நடத்திவரும் மதுக் கூடத்துக்குள்

செவ்வாய்க்கிழமை அதிகாலை மாடசாமி புகுந்து, சதீஷை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பிரிட்ஜ், கண்காணிப்பு கேமரா உள்பட பல்வேறு பொருள்களை சேதப்படுத்திச் சென்றாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாடசாமியைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT