தூத்துக்குடி

தூத்துக்குடியில் 4 கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமனம்

DIN

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 கோயில்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலா்களுக்கு நியமனஆைணையை அமைச்சா் பெ. கீதாஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் நிா்வாகத்துறையின் கீழ் வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மேலூா் பத்திரகாளியம்மன் கோயில், சக்தி கணபதி கோயில், மட்டக்கடை உச்சிமாகாளியம்மன் கோயில் ஆகிய 4 கோயில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறங்காவலா்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூா் பத்திரகாளியம்மன் கோயில் அறங்காவலா்களாக கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, சக்தி கணபதி கோயில் அறங்காவலராக இளங்குமரன், மட்டக்கடை உச்சிமாகாளியம்மன் கோயில் அறங்காவலராக ராமமூா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான நியமன ஆணையை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வழங்கினாா்.

இதில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலா்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT