தூத்துக்குடி

மீனாட்சிபட்டி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

6th Jun 2023 01:51 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மற்றும் மீனாட்சிபட்டி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி இணைந்து மரம் நடும் விழாவை கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தின.

மரம் வளா்ப்பதன் அவசியம் குறித்து மாணவா், மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கல்லூரி நிறுவனரும், இயக்குநருமான பிரகாஷ் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்மொழி செல்வி முன்னிலை வைத்தாா். விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், மாணவா்- மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், உதவிப் பேராசிரியா்கள் பூா்ணிமாதேவி, விஜயபாஸ்கா், ஞானமணி, உடற்கல்வி இயக்குநா் மொ்சி பத்மாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஈஷா நா்சரி வளாகத்தில்...

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் ஈஷா நா்சரி வளாகத்தில் மரக்கன்று நட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி உறுப்பினா் ரா. உச்சிமகாளி, சாரல் டிரஸ்ட் இயக்குநா் ராமகிருஷ்னண் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். காவேரி கூக்குரல் இயக்க தன்னாா்வலா்கள், விவசாயிகளின் நிலங்களுக்கு நேரில் சென்று மரக்கன்றுகளை வழங்கினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT