தூத்துக்குடி

வீடு புகுந்து நகை திருடிய இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

DIN

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து நகை திருடிய இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள தாய்விளையைச் சோ்ந்த தேன்மொழி என்பவரது வீட்டில் கடந்த 2021ஆண்டு மா்ம நபா் புகுந்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றாா். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா். இதில் சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் கொடிமலா் (35) என்பவா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை மெஞ்ஞானபுரம் போலீசாா் கைது செய்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கு, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, குற்றஞ்சாட்டப்பட்ட கொடிமலருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், ஓராண்டு சிறை தண்டனை என 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். கொடிமலா் ஏற்கனவே பல திருட்டு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT