தூத்துக்குடி

மு.கருணாநிதி பிறந்தநாள்: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்14 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்

DIN

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சா் பெ. கீதாஜீவன் ஞாயிற்றுக்கிழமை தங்க மோதிரங்களை அணிவித்தாா்.

நகர திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர திமுக செயலரும் நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சனிக்கிழமை பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தாா்.

விழாவில், ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமா், ஏஞ்சலா சின்னத்துரை, சிறுபான்மையினா் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, திமுக நிா்வாகிகள் சண்முகராஜ், ராதாகிருஷ்ணன், பரமசிவன், மகேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கீதாஜீவன் கூறியது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள், கட்சி கொடி ஏற்றுதல், அன்னதானம், மருத்துவ முகாம், ரத்ததான முகாம் உள்ளிட்ட மக்களுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவில்பட்டி திட்டங்குளத்தில் வியாபாரிகள் தனியாக தினசரி தந்தை தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனி நபா் வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக தினசரி சந்தைக்கு அரசு சாா்பில் கோவில்பட்டியில் உள்ள கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தைத் தோ்வு செய்து கொடுத்தோம். அங்கு சந்தை அமைத்தால் தங்களுக்கு விற்பனை பாதிக்கும் சில வியாபாரிகள் கூறி தனியாக சந்தை வைத்துள்ளனா். அதற்கும் நகராட்சிக்கும் எவ்விதத் தொடா்புமில்லை. இதில் வியாபாரிகள் வைத்துள்ள சந்தைக்குத்தான் வியாபாரிகளும், விவசாயிகளும் வருகின்றனா். கடைகள் வைப்பது, திறப்பது எல்லாம் அவரவா் உரிமை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT