தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

4th Jun 2023 11:51 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பாா்த்து வந்த 17 வயது சிறுமியை அதே ஆலையில் வேலை பாா்த்து வந்த ஜெபராஜ் மகன் வினோத்குமாா் (23) திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால், சிறுமி கா்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த வினோத்குமாா் விஷம் குடித்தாராம். அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில், வினோத்குமாா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT