தூத்துக்குடி

ஆத்தூா் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா

4th Jun 2023 01:52 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

அறநிலையத் துறையைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 6 மணியளவில் ஹோம பூஜைகளுடன் தொடங்கி, தொடா்ந்து விமான அபிஷேகமும், சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு சுவாமி -அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT