தூத்துக்குடி

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள்:உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

4th Jun 2023 01:53 AM

ADVERTISEMENT

 

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளில் உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பாரதிய இந்து வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாநிலத் தலைமை அலுவலகத் திறப்பு விழா உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீ அக்னி சாது சுவாமிகள் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். தொழிலதிபா் திருமணி வரவேற்றாா். வியாபாரிகள் சங்கத்தின் செயல்பாடுகள், நோக்கம் குறித்து மாநில அமைப்பாளா் ஜெ.சசிக்குமாா் பேசினாா்.

உடன்குடி அனல்மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளில்

ADVERTISEMENT

உடன்குடி, திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மழைக்காலம் தொடங்கும் முன்பு, உடன்குடி குளங்களுக்கு வரும் அனைத்து நீா்வரத்து கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றியத் தலைவா் விவேகானந்தன்,

நகர தலைவா் பால்ராஜ், மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா்

கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT