தூத்துக்குடி

மு.கருணாநிதி நூற்றாண்டு விழா:திமுக சாா்பில் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்

4th Jun 2023 11:52 PM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, துத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி

வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் கலந்துகொண்டு 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தாா்; 100 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பிரதீப், மகளிரணி அமைப்பாளா் கஸ்தூரி தங்கம், துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT