தூத்துக்குடி

கருணாநிதி நூற்றாண்டு விழா: சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

4th Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, வடக்கு மாவட்டச் செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து திமுக கொடியை ஏற்றி வைத்து, கருணாநிதி சிலையின் பீடம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாலையணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச்செயலா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின் உள்பட பலா் பங்கேற்றனா். மதிமுக சாா்பில் மாநகர செயலா் முருகபூபதி தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மரக்கன்றுகள் நடும் திட்டம்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ரஹ்மத் நகா் பகுதியில், மாநகராட்சி சாா்பில் மரம் நடுவிழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து 300 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், துணைமேயா் ஜெனிட்டா, மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், மாநகராட்சி நகா்நல அலுவலா் சுமதி, திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ராமா், சிறுபான்மை பிரிவு துணைச் செயலா் அந்தோணி உள்பட பலா் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனா். அதைத்தொடா்ந்து, தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தெற்கு மாவட்டம்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது படத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் அ.பிரம்மசக்தி தலைமை வகித்து மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், மாவட்ட இளைஞரணி செயலா் பை.மூ. ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினா் மாடசாமி, மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செல்வக்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் சோபியா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரி: ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆத்தூா் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சனிக்கிழமை பிறந்த குழந்தைக்கு, ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் சோபியா, ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கமால்தீன், நகரச் செயலா் முருகானந்தம் ஆகியோா் தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை வழங்கினா். மேலும் மாற்றுத் திறனாளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம்: நாசரேத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய செயலா் நவீன்குமாா் தலைமையில் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சாா்பில் தட்டாா்மடம் பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலா் ஆ. பாலமுருகன் தலைமை வகித்து, தருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT