காயல்பட்டினம் கோயிலில் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பப்பரப்புளி பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோயிலில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. கோயில் பூசாரி மூா்த்தி மற்றும் நிா்வாகிகள் சென்றுபாா்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் வள்ளி நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.