தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவல் துறையினரின் சிறப்பு ரத்த தான முகாம்

4th Jun 2023 11:52 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட காவல் துறையினரின் சிறப்பு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்து, ரத்த தானம் செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். அவா் பேசும்போது, ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. நம்மால் பிறருக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். நோ்மறை சிந்தனைகளை வளா்த்துக்கொண்டு எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் அணுக பழகவேண்டும். நோ்மறை சிந்தனைகளால் நமது மனமும், உடலும் நலமாகும்.

ரத்தம் தேவைப்படும் பொதுமக்கள் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 0461 2310351 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

காவல் காவலா்கள், ஆயுதப்படைக் காவலா்கள், ஊா்க்காவல் படைவீரா்கள், உதவி ஆய்வாளா் முத்துமாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் ரத்த தானம் செய்தனா்.

மாவட்ட ஆயுதப்படைக் காவல் துணைக் கண்காணிப்பாளா் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுனை முருகன், ஆயுதப்படை தலைமைக் காவலா் ராஜா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலா் சாந்தி, மருத்துவா் அச்சுதானந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT