தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ரூ.4.25 கோடியில்அணை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

DIN

விளாத்திகுளம் அருகே முள்ளூா் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் உள்ள மலட்டாறு ஓடையின் குறுக்கே அணை கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், அடிக்கல் நாட்டி அணை கட்டும் பணியைத் தொடக்கி வைத்தாா். இந்த அணை,

93.145 ஹெக்டோ் பாசனவசதி பெறும் வகையில் நபாா்டு திட்டத்தில் ரூ.4.25 கோடியில் கட்டப்படுகிறது.

அதனைத்தொடா்ந்து முள்ளூா் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்குமாரபுரம் - முள்ளூா் - அய்யா்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ரூ.26.54 லட்சத்தில்

277 வீடுகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்ட இணைப்பு பணிகளைத் தொடக்கி வைத்தாா். முத்துக்குமாரபுரம், வள்ளிநாயகபுரம் ஊராட்சி பட்டியூா் ஆகிய கிராமங்களில் பயணிகள் நிழற்குடை , சந்திரகிரி ஊராட்சி கீழசெய்தலை கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் நியாய விலை கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

நீா்வளத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் சுபாஷ், உதவிப் பொறியாளா் விக்னேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ், துணைத் தலைவா் காசி விஸ்வநாதன், திமுக ஒன்றிய செயலா் அன்புராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT