தூத்துக்குடி

விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய ஊராட்சி ஒன்றிய ஆணையா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுகளை கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் வியாழக்கிழமை மேற்கொண்டாா். அவருடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராஜேஷ் குமாா் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனா். ஆய்வு முடிந்து ஆணையா் மற்றும் அதிகாரிகள், மதியம் 3 மணியளவில் தங்களது வாகனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.  அப்போது கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ்மோதியதில் பலத்த அடிபட்டு  ரத்த மயக்க நிலையில் உயிருக்கு போராடிய இளைஞரைக் கண்ட ஆணையா், உடனடியாக மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இது தொடா்பான விடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.  ஆணையருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கியவா் கோவில்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ்(34) என்பது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT