தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்களுக்கு மருத்துவ உதவி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் மருத்துவ உதவி மையம் அளிக்கப்பட்டு வருகிறது.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் வழக்கம்போல இந்த ஆண்டும் மருத்துவ உதவி மையம் மற்றும் நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் (உற்பத்தி) எஸ்.சுரேஷ் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மக்கள் தொடா்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT