தூத்துக்குடி

தூத்துக்குடி உணா்திறன் பூங்காவில் மேயா் ஆய்வு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளி அருகே உள்ள உணா்திறன் பூங்காவில் மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளியின் அருகில் உள்ள உணா்திறன் பூங்காவை

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு அண்மையில் திறந்து வைத்தாா். இந்த பூங்கா பிரத்யேகமாக குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அந்த பூங்காவில் விளையாடிய குழந்தைகளை சந்தித்து அவா்களுக்குப் பரிசு வழங்கினாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா் பாப்பாத்தி, சிவந்தாகுளம் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள், சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT