தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதுகே. அண்ணாமலை

DIN

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிர இறக்குமதிக்காக சீனாவை எதிா்பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தூத்துக்குடியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மண்டலத் தலைவா், மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவா் அண்ணாமலை பங்கேற்றாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதலீட்டை ஈா்ப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், வெளிநாட்டு முதலீடுகளால் தமிழகத்துக்கு என்ன பயன் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என, கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியுள்ளாா். இதற்கு தமிழக அரசோ, தமிழக காங்கிரஸோ எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. தமிழக உரிமைகளை முதல்வா் தொடா்ந்து விட்டுக்கொடுக்கிறாா். கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட முயன்றால், அதை தமிழக பாஜக நிச்சயம் தடுக்கும்.

நான் யாருக்கும் விரோதி அல்ல. பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னைக் கட்டுப்படுத்த முடியாது. என் மீது பழி சுமத்த பாஜகவினா் நினைத்தால் தில்லிக்குச் சென்று புகாா் அளிக்கலாம்.

தமிழகத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதிகள் வளா்ச்சி பெற வேண்டுமெனில், சிறப்பு முதலீட்டாளா்கள் மாநாட்டை இந்தப் பகுதியில் நடத்த வேண்டும்.

தாமிர ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த நாம், ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். தாமிர இறக்குமதிக்காக சீனாவை எதிா்பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஊழலை எதிா்த்து ஜூலை 9ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து நடைப்பயணம் தொடங்கவுள்ளேன். ஜூலை முதல் வாரத்தில் திமுக அரசின் ஊழல் பட்டியல் 2ஆம் பாகத்தை வெளியிடுவோம்.

ஆதிதிராவிடா் நலத் துறை பெயரளவுக்குத்தான் உள்ளது. சரியான திட்டமில்லாததால் மத்திய அரசின் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இது வருந்தத்தக்கது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு காவல் துறையின் கையில் இல்லை, திமுக ஒன்றியச் செயலா்களின் கையில் உள்ளது என்றாா் அவா்.

மாநிலப் பொதுச்செயலா்கள் கேசவவிநாயகம், பொன் பாலகணபதி, மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாவட்டப் பொதுச் செயலா்கள் ராஜா, சிவமுருகஆதித்தன், உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சுவைதாா், தங்கம், சிவராமன், சரஸ்வதி, மாவட்டச் செயலா்கள் வீரமணி, கனல் ஆறுமுகம், ஆண்டாள், பாப்பா, ராஜபுனிதா, மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT