தூத்துக்குடி

இன்று வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடைபெறுவதையொட்டி, பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இக்கோயிலில் வசந்த திருவிழா கடந்த 24-ஆம் தொடங்கியது. தினமும் கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வைகாசி விசாகத்தையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேக தீபாராதனைக்குப் பின், சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றவுடன், வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகின்றன. தொடா்ந்து, மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

வைகாசி விசாகத் திருவிழாவைக் காண விருதுநகா், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். பக்தா்களுக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள், குடிநீா், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், பா.கணேசன், திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

எஸ்.பி. ஆய்வு: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி ஏஎஸ்பி (தலைமையிடம்) காா்த்திகேயன் தலைமையில் திருச்செந்தூா் டிஎஸ்பி மு.வசந்த்ராஜ் உள்பட 5 டிஎஸ்பிக்கள், 20 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப் பணிகள் குறித்து எஸ்.பி. எல். பாலாஜி சரவணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், டிஎஸ்பிக்கள் திருச்செந்தூா் (பொறுப்பு) மாயவன், சாத்தான்குளம் அருள், காவல் ஆய்வாளா்கள் ஆனந்த தாண்டவம் (திருச்செந்தூா் கோயில்), அன்னராஜ் (ஸ்ரீவைகுண்டம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT