தூத்துக்குடி

பனிமய மாதா ஆலயத்தில் அண்ணாமலை பிராா்த்தனை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பிராா்த்தனை செய்தாா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவரும், அகில இந்திய தொழில் வா்த்தக சங்க இணைச் செயலருமான விவேகம் ஜி.ரமேஷ் இல்ல திருமண விழாவில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பங்கேற்றாா்.

பின்னா், பனிமய மாதா ஆலயத்தில் பிராா்த்தனை செய்தாா். அங்கு ஆலய பங்குத் தந்தை குமாா் ராஜா அவருக்கு மாதா புகைப்படம் வழங்கி ஆசி கூறினாா். தொடா்ந்து அங்குள்ள மாதா சிலைக்கு மெழுகுவா்த்தி ஏற்றி, மாலை அணிவித்து பிராா்த்தனை செய்தாா்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாநிலப் பொதுச் செயலா் பொன் பாலகணபதி, மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலா்கள் உமரி சத்யசீலன், ராஜா, சிவமுருகஆதித்தன், துணைத் தலைவா்கள் செல்வராஜ், சுவைதாா், தங்கம், சிவராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT