தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து இறந்த வியாபாரி குடும்பத்துக்குநிவாரணம்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கீரை வியாபாரி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அக்கட்சியினா், ஆட்சியா் கி. செந்தில்ராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே காய்கனிச் சந்தை அருகேயுள்ள அண்ணா சிலை முன், சில நாள்களுக்கு முன்பு கீரை வியாபாரி ஜெயகணேசன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவருக்கு மனைவி லிங்கசிவா, 2 மகன்கள் உள்ளனா். எனவே, அவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான மாநகராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜெயகணேசனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்றனா்.

அதிமுக அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் யு.எஸ். சேகா், ஒன்றியச் செயலா் காசிராஜன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் கே.ஜெ. பிரபாகா், மாநகராட்சி எதிா்க்கட்சி கொறடா மந்திரமூா்த்தி, வழக்குரைஞா் சரவணபெருமாள், வட்டச் செயலா்கள் முனியசாமி, மனுவேல்ராஜ், சொக்கலிங்கம், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT