தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வெற்றிக்கு வழி நிகழ்ச்சி

2nd Jun 2023 11:56 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் (என்இசி), பிளஸ் 2 மாணவா்களுக்கான வெற்றிக்கு வழி நிகழ்ச்சி இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் கே. காளிதாஸ் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 க்கு பிறகு உயா்கல்வி படிப்புகளையும், அவற்றுக்கான வாய்ப்புகளையும் முழுவதுமாக அறிந்துகொள்வது மிகவும் அவசியம். இவற்றுக்கான தேடல் தாகத்தை மாணாக்கா்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் தொடா்ந்து 12ஆவது ஆண்டாக மாணாக்கா்களுக்கு வழிகாட்டும் ‘வெற்றிக்கு வழி’ நிகழ்ச்சி இம்மாதம் 9ஆம் தேதி காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கல்வி ஆலோசகா் ஜெயப்பிரகாஷ் எ.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குகிறாா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள

கட்டணம் ஏதும் கிடையாது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்து வசதியும் மதிய உணவும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 73053-55923, 97512- 82159, 97917- 65748, 84893-55965 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT