கோவில்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த முத்துசாமிபுரம் கீழத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் விஜயராஜ்(48). விவசாயியான இவருக்கும், உடன்பிறந்த சகோதரிகளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.