தூத்துக்குடி

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

1st Jun 2023 12:06 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் அருள்மிகு செல்வவிநாயகா், அழகிய சுந்தர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கும்ப புறப்பாடு, விமான அபிஷேகம், விநாயகா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜையை கண்ணன் ஐயங்காா், ராமன் ஆகியோா் நடத்தினா்.

நிகழ்ச்சியில், சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. சங்கரலி­ங்கம், நகரச் செயலா் முருகன், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவா் ஜெ. நடராஜன், டி.சி.டபிள்யூ. சுப்பிரமணியன், அருணாசலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT