தூத்துக்குடி

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமாகாவினா் நூதன போராட்டம்

1st Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞா் அணியினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம், போதை பொருள்களை ஒழிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞா் அணி சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு உடுக்கை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் கனி தலைமை வகித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால், வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தட்சிணாமூா்த்தி உடுக்கையை அடித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடல்களை பாடினாா்.

ADVERTISEMENT

இதில், கட்சியின் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலா் பொன்ராஜ், மாவட்டச் செயலா் கணேசன், இணைச் செயலா் கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.  தொடா்ந்து போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினிடம் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT